கூட்டணியை நாங்க பாத்துக்குறோம்; குருமூர்த்தியோடு அமித்ஷா ஆலோசனை!

Amitshah
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (09:02 IST)
நேற்று சென்னை வந்த அமித்ஷா பாஜக கூட்டத்தில் பேசிய பிறகு ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ரஜியின் அரசியல் பயணம் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த அமித்ஷா அரசு நிகழ்வுகள் முடிந்த பின்னர். பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என கூறிய அவர் அதற்கான பணிகளை பாஜகவினர் திறம்பட செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் தமிழகத்தில் கூட்டணி குறித்து தலைமை பார்த்துக் கொள்ளும் என்றும், தமிழக பாஜகவினர் தேர்தல் பணிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிறகு இரவு 11 மணியளவில் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த அவர் நள்ளிரவு வரை 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது ரஜினியின் அரசியல் பயணம் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :