ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (11:33 IST)

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால்.. துரை வைகோ எச்சரிக்கை

Durai vaiko
வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளரான துரைவைகோ இதுகுறித்து கருத்து தெரிவித்த போது ஒரு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்.
 
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று திராவிட கட்சிகள் அனைத்தும் கூறிவரும் நிலையில் பிரதமர் மோடி எந்த தைரியத்தில் இருக்கிறார் என அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 
இருப்பினும் பிரதமர் வேட்பாளர் என்ற முறையில் மோடி இந்தியாவில் உள்ள எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Mahendran