பாஜகவுக்கு வாக்கு இயந்திரத்தின் மேல் தான் நம்பிக்கை உள்ளது: துரை வைகோ
பாஜகவுக்கு மக்கள் மீது உள்ள நம்பிக்கையை விட வாக்கு இயந்திரத்தின் மேல் தான் அதிக நம்பிக்கை இருக்கிறது என திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பாஜகவுக்கு மக்கள் மேல் நம்பிக்கை இல்லை என்றும் வாக்கு இயந்திரத்தின் மேல் தான் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் அனைத்தும் பாஜக கையில் தான் இருக்கிறது இவற்றையெல்லாம் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக கனவு காண்கிறது என்றும் தெரிவித்தார்
ஆனால் மக்கள் ஆதரவு இந்தியா கூட்டணிக்கு தான் உள்ளது என்றும் மக்கள் ஆதரவுடன் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
திமுக தேர்தல் அறிக்கை ஒன்றே எங்கள் கூட்டணி வெற்றி பெற போதுமானது என்றும் திருச்சி மாவட்டத்திற்கு என்னென்ன தேவையோ அதை எம்பி என்ற அளவில் நிறைவேற்றி வைப்பேன் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva