கட்சிப் பொறுப்புக்கு வந்தது ஏன்? துரை வைகோ பேட்டி
மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன் என துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.
மதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக நேற்று ரகசிய வாக்கெடுப்பு நடந்த நிலையில் பெரும்பாலானோர் வாக்குகளை பெற்று துரை வையாபுரி புதிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கட்சியிலுள்ள பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு அரசியலை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த வைகோ தனது வாரிசை கட்சிக்கு கொண்டு வந்து உள்ளதை ஜீரணிக்க முடியாது என்று ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மதிமுக இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து துரை வைகோ பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் கட்சிப் பொறுப்புக்கு வந்தேன். மதிமுக தொண்டர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவர்கள், அவர்கள் அழைப்பை நிராகரிக்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.