1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (12:12 IST)

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்.. புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்..!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி, கடந்த சில மாதங்களாக வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அவரை புகைப்படம் எடுக்க வந்த பத்திரிகையாளர்களை மு.க. அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சகோதரர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மார்ச் மாதம் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முக அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வேலூரில் தங்கி, அவரை கவனித்துக் கொண்டிருந்த நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்த துரை தயாநிதி வீடு திரும்பியபோது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் முயன்றபோது, அழகிரி ஆதரவாளர்கள் தாக்கியதாகவும், கேமராக்களை பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பேச்சுவார்த்தைக்கு பின் கேமராக்கள் ஒப்படைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran