1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (13:49 IST)

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் துரை தயாநிதி.. முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு..!

முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரை நையாநிதி கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 
 
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வேலூர் சென்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சிஎம்சி மருத்துவமனைக்கு சென்று துரை தயாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முக அழகிரி உள்பட அவரது குடும்பத்தினர் முதல்வர் தங்கள் மகனின் உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
Edited by Mahendran