வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 ஜனவரி 2021 (15:38 IST)

நீட் மதிப்பெண் போலி சான்றிதழ் விவகாரம் - மாணவியின் தந்தை கைது

நீட் தேர்வு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக மாணவி ஒருவரும் அவரது தந்தையும் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்
 
நீட் தேர்வு மதிப்பெண்ணில் போலி மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்த மாணவி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையில் அவர் மீதும் அவரது தந்தை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென அந்த மாணவியும் அவருடைய தந்தை பாலசந்திரன் என்பவரும் தலைமறைவாகினர். தலைமறைவாக இருந்த மாணவி மற்றும் பாலச்சந்திரன் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் பெங்களூரில் சற்று முன்னர் பெரியமேடு தனிப்படை போலீசார் பாலசந்திரனை மட்டும் கைது செய்துள்ளனர் 
 
சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி முன் பாலச்சந்திரன் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தலைமறைவாகவுள்ள மாணவி இருப்பிடம் குறித்து விசாரணை நடந்து வருகிறது