Hyper வேகத்தில் கொரோனா: 2 நாட்களாக அதிக எண்ணிக்கை ஏன்??
கடந்த இரு நாட்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்னவென வெளியாகியுள்ளது.
நேற்று தமிழகத்தில் 6,785 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,785 பேர்களில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. அதோடு தமிழகத்தில் 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக என்றும் இல்லாத வகையில் கொரோனா 6,000 - 7,000 என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் என்னவென்றால், கடந்த சில நாட்களாக தமிழககத்தில் இதமான வானிலை அதாவது மழையும் மேகமூட்டமமுமாக உள்ளது.
எனவே காற்றி ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் கொரோனா பரவலும் தனது வேகத்தை அதிகரித்துள்ளது. இருப்பினும் சோதனைகள் துரித நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் பீதிக்கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.