செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2024 (11:41 IST)

தீபாவளி பண்டிகை: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.. சென்னை - தூத்துக்குடிக்கு ரூ.13000?

Flight
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு செல்ல விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகள் ரயில்கள் ஆகியவற்றில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

ஏற்கனவே வழக்கமான ரயில்களில் முழுவதுமாக முன்பதிவு முடிந்த நிலையில் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் திறந்து விட்டதை அடுத்து முன் பதிவு இல்லா பெட்டிகளில் அதிக கூட்டம் பயணிகள் கூட்டம் இருப்பதாகவும் அதே போல் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ரயில் பேருந்துகளில் செல்ல முடியாதவர்கள் விமான பயணத்தை மேற்கொள்ள முயற்சி செய்யும்போது விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,109 என இருக்கும் நிலையில், தற்போது, ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,300 என்ற நிலையில், தற்போது, ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran