ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (14:33 IST)

குடிபோதையில் அடிதடி.! பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப்பதிவு.!!

Singar Mano
மது போதையில் கல்லூரி மாணவனை தாக்கியதாக பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
திரைப்படப் பாடகர் மனோவின் வீடு சென்னை வளசரவாக்கத்தில் உள்ளது. மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் ஆகியோர் மது போதையில் கல்லூரி மாணவன் மற்றும் சிறுவன்  ஒருவனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

இதில் தாக்கப்பட்ட கிருபாகரன் எனும் இளைஞரும், இன்னொரு சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  
 
அதன் பேரில் வளசரவாக்கம் போலீசார் பாடகர் மனோவின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மனோவின் இரண்டு மகன்கள் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். 

 
வழக்குபதிவு செய்த நிலையில் 2 மகன்களும் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மனோவின் மகன்களின் நண்பர்களான விக்ரம், தர்மா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.