வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (09:47 IST)

போதை ஊசி செலுத்தி கொண்ட இளைஞர் பரிதாப பலி.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

injection
தமிழகத்தில் போதை பொருள் அதிக நடமாட்டம் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் சென்னை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதை ஊசி செலுத்தி கொண்ட நிலையில் அவர் பரிதாபமாக துடிதுடித்து பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் என்ற 26 வயது இளைஞர் மீது பல வழக்குகள் காவல் நிலையத்தில் இருக்கும் நிலையில் அவர் கஞ்சா உட்பட போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று முன்தினம் தீனதயாளன் நண்பர்களுடன் சேர்ந்து , போதை ஊசியை உடலில் செலுத்தி கொண்டதாகவும் போதை தலைக்கேறிய நிலையில் அவர் திடீரென மூச்சு இல்லாமல் இருந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியதாகவும் தெரிகிறது

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவருடைய நண்பர்களிடம் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva