1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 மார்ச் 2024 (14:20 IST)

போதை ஊசி தயாரித்து மாணவர்களுக்கு விற்பனை; கரூரில் 6 பேர் அதிரடி கைது

Injection
போதை ஊசி தயாரித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ஆறு பேர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஆங்காங்கே போதைப் பொருட்கள் பிடிபட்டு வரும் தகவல்களும் கிடைத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கரூரில் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தி போதை ஊசிகள் தயாரித்து அதை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் மூலம் வலி மாத்திரைகளை வாங்கி அதன் மூலம் போதை ஊசி தயாரித்தது தெரிய வந்தது. ஆறு பேர் கும்பலை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்

இந்த போதை ஊசியை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களுக்கு இதய நோய் மன நோய் உள்ளிட்ட பாதிப்புகள் வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது

Edited by Siva