திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:44 IST)

வீடியோவால் போன வேலை திரும்பக் கிடைத்தது. –ஓட்டுனர் விஜயகுமார் மகிழ்ச்சி

அரசுப் பேருந்தின் மோசமான நிலை குறித்து பேசி சஸ்பெண்ட் ஆன திண்டுக்கல ஓட்டுனர் விஜயகுமாரின் வேலை மீண்டும் கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்துத் துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் விஜயகுமார். அரசுப் பேருந்துகள் ஒழுங்காக பராமரிக்கப்படாமல் இருக்கும் நிலையைப் பற்றி தன் அருகில் இருந்தவரிடம் கூறியுள்ளார். மழையின் போது பணியில் இருந்த விஜயகுமார் ஒட்டுனர் இருக்கைக்கு அருகில் உள்ள ஜன்னல்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மழை மழைச் சாரல் உள்ளே வருவதாகவும் இரவு நேரப் பணியின் போது மழையில் நனைந்து கொண்டே ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளதென்றும் இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் அருகில் அமர்ந்திருந்த பயணியிடம் புலம்பி இருக்கிறார்.

இதை தனது பொபைலில் வீடியோ எடுத்த அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வேகமாக பரவியதையடுத்து தற்போது அந்த ஓட்டுனர் விஜயகுமார் மீது மாவட்ட போக்குவரத்துத் துறை பயணியிடம் பேசிக்கொண்டே பேருந்து ஓட்டியதற்காக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்த சஸ்பெண்ட் உத்தரவு குறித்து அவருக்கு ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு ஆதரவுக் குரல் எழுந்தது. மேலும் போக்குவரத்துக் கழகத்தின் அலட்சியம் மற்றும் பழிவாங்கும் போக்கை நெட்டிசன்கள் கழுவி ஊற்றினர். இதனால் தற்போது ஓட்டுனர் விஜயகுமாரின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளனர்.