திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (16:56 IST)

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு பணி - ஒருவர் உயிரிழப்பு

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கப்படும் போது ஏற்பட்ட விபத்தில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.


 

 
கடந்த மே மாதம் 31ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கிரையாகி உருக்குலைந்து போயுள்ளது. இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி ஜா கட்டர் இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இன்று மாலை இடிப்பு பணை நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அதிக எடை கொண்ட ஜா கட்டர் இயந்திரம் மேலிருந்து கீழே விழுந்தது. இதில், படுகாயமடைந்த இயந்திர வாகனத்தின் ஓட்டினர் சரத் அங்கேயே பலியானார். இந்த விபத்து காரணமாக அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபத்து கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.