செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (15:50 IST)

வெங்காய வியாபாரத்தில் மோசடி! – சென்னை தொழிலதிபரை ஏமாற்றிய டிரைவர்!

சென்னையில் வெங்காயம் வாங்க நினைத்த பிரபல தொழிலதிபரிடம் 8 லட்ச ரூபாய் மோசடி செய்த டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் தியாகராய நகரில் துணிக்கடை நடத்தி வரும் பிரபல தொழில் அதிபரின் மகன் நாசிக்கில் 8 லட்ச ரூபாய்க்கு வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார். வெங்காயம் அனுப்பியவரின் கணக்குக்கு பணம் அனுப்ப வங்கி கணக்கு எண் கேட்டபோது டிரைவர் பிரகாஷ் சாதுர்யமாக தனது கணக்கு எண்ணை கொடுத்திருக்கிறார்.

வியாபாரிக்கு பணம் சென்று சேரவில்லை என்பதை அறிந்த தொழிலதிபர் டிரைவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் டிரைவர் எண் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்துள்ளது. டிரைவர் மோசடி செய்ததை உணர்ந்த தொழிலதிபர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் வெங்காயவிலை அதிகரித்து வரும் நிலையில் வெங்காய வியாபாரியையும், தொழிலதிபரையும் ஒரே நேரத்தில் டிரைவர் ஒருவர் ஏமாற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.