புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (11:52 IST)

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் - குடிமகன்கள் அதிர்ச்சி

மோட்டார் வாகன சட்டத்தில்  பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் படி அபராதத் தொகைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.


 

 
அதாவது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் தற்போது ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. புதிய சட்டப்படி அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் வசூலிக்கப்படும் தொகை ரூ.100 லிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்ள்ளது.
 
மேலும், ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம், விபத்தில் பலியானால் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு, விபத்துகளில் காயமடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு ஆகியவை புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகிய அனைத்தும் ஆதார் எண்ணுடன் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.