1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (21:01 IST)

கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - உயர்கல்வித்துறை அறிவிப்பு

கல்லூரிப் பேராசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு - உயர்கல்வித்துறை அறிவிப்பு
கல்லூரிப்  பேராசிரியர்கள்  கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டுமெனவும்,  உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள  கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில், மேலங்கி அணிய வேண்டும் என  கல்லூரி கல்வி இயக்ககம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், பேராசிரியர்களுக்கு இடையே வேறுபாடு ஏற்படுத்தாதபடி கண்ணியமிக்க ஆடைகளை  அணிய வேண்டுமெனவும்,  பேராசிரியர்கள்  உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Edited by Sinoj