தொடர்புடைய செய்திகள்
- கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டும் அடாவடி அரசு - எடப்பாடி பழனிசாமி
- மணல் கொள்ளையர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்! அன்புமணி கோரிக்கை..!
- தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அன்புமணி ராமதாஸ்
- தமிழ்நாட்டின் மிகப்பெரிய மதுபானக்கூடம் சேப்பாக்கம் விளையாட்டு மைதானம்:- அன்புமணி ராமதாஸ்
- காலையில் அமமுகவில் இருந்து நீக்கம்.. மாலையில் அதிமுகவில் இணைப்பு..!
அது கூடவே கூடாது.. கட்சி தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த டாக்டர் ராமதாஸ்..!
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாலைகள் யாருக்கும் அறிவிக்க கூடாது என கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கட்சியின் நிகழ்ச்சிகளில் யாருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டாம் என கூறியிருந்தார் என்பதும் இந்த முறை பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாலை அணிவிக்கும் கலாச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்தது. இதனை அடுத்து கட்சி தொண்டர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இருப்பதாவது:
மாலைகளுக்கு இடம் தரக்கூடாது! பாட்டாளி மக்கள் கட்சி நிகழ்ச்சிகளில் மாலைகளுக்கு இடம் கிடையாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் ஒழிக்கப்பட்டு விட்டது. அந்தக் கலாச்சாரம் இப்போது சில இடங்களில் மீண்டும் துளிர்விடுவதாக அறிகிறேன். அது கூடவே கூடாது. மாலை அணிவிக்கும் கலாச்சாரத்திற்கு பா.ம.க. நிர்வாகிகள் எவரும் இடம் தரக்கூடாது என்று எச்சரிக்கிறேன்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
