தொடர்புடைய செய்திகள்
- சென்னைக்கு இந்த பெருமைகள் மட்டும் போதாது.. சென்னை நாள் குறித்து டாக்டர் ராமதாஸ்..!
- மாதம் 300 யூனிட் இலவசம் மின்சாரம்.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு..!
- மேட்டூர் அணையை பாலைவனமாக்க மேற்கொள்ளப்படும் சதியை முறியடிக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்..
- ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அரசுக்கு கேள்வி எழுப்பிய டாக்டர் ராமதாஸ்..!
- இஸ்ரோ அறிவியலாளர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்- டாக்டர் ராமதாஸ்
அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள் மூடப்பட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்..!
அனல் மின்நிலையங்கள், அணுமின்நிலையங்கள் மூடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் கூறியிருப்பதாவது:
அனல் மின்நிலையங்களும், அணுமின்நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும், இந்த நீதிமன்றமும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காவிரி ஆறு மீது சூரியஒளி மின் தகடுகளை அமைத்தால் என்.எல்.சி அளவுக்கு மின்சாரத்தை தயாரித்து விட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
இயற்கை மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் அக்கறை எங்களைப் போன்ற இயற்கை ஆர்வலர்களின் நம்பிக்கைக்கு வலு சேர்க்கிறது. உயர்நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேற வேண்டும்!
Edited by Mahendran
