வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (12:40 IST)

நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? டாக்டர் ராமதாஸ்

ramadoss
நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
மின் நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்துவதற்காக 7.3 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு மின்வாரியம் இவ்வளவு அவசரம் காட்டுவது தேவையற்றது!
 
மின்வாரியத்திடம் 4.8 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் பயன்படுத்தப்படும். 6 மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்வது புத்திசாலித்தனம் அல்ல!
 
பன்னாட்டு சந்தையில் நிலக்கரி விலை அதிகமாக உள்ளது. நிலக்கரிக்கான தொகை டாலரில் தான் வழங்கப்பட வேண்டும். அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், டன்னுக்கு ரூ.1000 வரை மின்சார வாரியத்திற்கு கூடுதலாக செலவாகக் கூடும்!
 
ஆறு மாதங்களுக்கு பிறகு பயன்படுத்துவதற்கான நிலக்கரியை இப்போதே இறக்குமதி செய்து சேமித்து வைப்பது அதன் தரத்தையும் பாதிக்கும். எனவே, நிலக்கரி இறக்குமதி செய்வதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை  தமிழ்நாடு மின்சார வாரியம் ஒத்தி வைக்க வேண்டும்!
 
Edited by Siva