திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 மே 2023 (19:54 IST)

வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கடிதம்

வன்னியர்களின் உள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது: 
 
 பிளஸ் டூ தேர்ச்சி விகிதங்களின் அடிப்படையில் கடைசி இடங்களைப் பிடித்த ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களும் வட தமிழ்நாட்டை சேர்ந்தவை
 
முதல் 20 இடங்களைப் பிடித்த மாவட்டங்களில் ஒன்று கூட வட மாவட்டங்கள் இல்லை.  இவற்றில் ஒன்று கூட தமிழ்நாட்டின் சராசரி தேர்ச்சி விகிதமான 94 விழுக்காட்டை எட்டவில்லை. 
 
பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் கடைசி இடத்தை பிடிப்பது இது முதன்முறையல்ல. கடந்த 44 ஆண்டுகளாகவே வட மாவட்டங்கள் கடைசி இடங்களைத் தான் பிடித்து வருகின்றன.
 
இந்த நிலைக்கு முதன்மையான காரணம் வட மாவட்ட மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் வன்னியர்களும், பட்டியல் சமுதாயத்தினரும் தான்.
 
பள்ளி இறுதி வகுப்பு தேர்வு முடிவுகள் மூலம் சமூக, கல்வி நிலையில் வன்னியர்களின் மிக, மிக பிற்படுத்தப்பட்ட தன்மை உறுதி செய்யப்பட்டிருப்பது. எனவே வன்னியர் உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்’ இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran