திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜூலை 2019 (21:22 IST)

மனைவி மீது சந்தேகம் - மனைவியை கொன்று கணவர் தற்கொலை ! திடுக் சம்பவம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்துவந்தார். இவரது மனைவி கீதா. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கீதாவுக்கும், அவரது உறவினருக்கும் இடையே அதிக நெருக்கமான பழக்கமிருந்ததாகத் தெரிகிறது. இதை முருகேசன் கண்டித்துள்ளார். இதையடுத்து கீதா தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் கீதா, தன் பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்குச்சென்று கொண்டிருந்தார். பின்னர் கீதா வேலைக்குச் செல்லும் போது அவரை மறித்து குழந்தைக்காக தன்னுடன் சேர்ந்து வாழ முருகேசன் அழைத்துள்ளார். அதில் இரூவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனால் கோபம் அடைந்த முருகேசன் தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கீதாவை சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து சாணிப்பவுடை குடித்த முருகேசன், துடியலூரை அடுத்த ராமாபுரத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்போது கீதாவிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.