1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (19:57 IST)

தங்கத்தை அவசரப்பட்டு விற்பனை செய்ய வேண்டாம்: நகை மதிப்பீட்டாளர்கள் கருத்து:

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,088 ரூபாய் அதிகரித்த நிலையில் முதலீட்டு நோக்கத்தில் தங்கம் வாங்கியவர்கள் அந்த தங்கத்தை விற்பனை செய்ய இது சரியான நேரமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது
 
இது குறித்து தங்க நகை வியாபாரிகள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில் தங்கத்தின் விலை வாங்கிய விலையைவிட தற்போது அதிகரித்துள்ளதாக கருதி தங்கத்தை அவசரப்பட்டு யாரும் விற்பனை செய்ய வேண்டாம். ஏனெனில் தங்கத்தின் விலை வரும் காலங்களில் இன்னும் அதிகமாக உயரும். குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கத்தின் விலை பவுனுக்கு 30 ஆயிரத்தைத் தாண்ட வாய்ப்புள்ளது. எனவே முதலீடு நோக்கத்தில் தங்கம் வாங்கி சேமித்து வைத்தவர்கள் தற்போது விலை அதிகரிப்பை கணக்கில் வைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்றும், உலகப் பொருளாதார மார்க்கெட்டை உன்னிப்பாக கவனித்து, சரியான நேரத்தில் தங்கத்தை விற்பனை செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3,547 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகிறது. ஒரு பவுன் தங்கம் 28,376 என விற்பனையாகி வருகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 46.80 ரூபாயாகவும் கிலோ ஒன்றுக்கு 46 ஆயிரத்து 800 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது 
 
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்னும் தங்கம் விலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ள நிலையில் கையில் உள்ள தங்கத்தை அவசரப்பட்டு விற்பனை செய்ய வேண்டாம் என்பதே பலரது கருத்தாக இருந்து வருகிறது