புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 9 நவம்பர் 2021 (18:41 IST)

அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் - ஆளுநர் வலியுறுத்தல்!

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் கொள்ளளவை எட்டி விட்ட நிலையில் உபரிநீர் திறக்கப்படுவதால் மக்கள் பெரும் தவிப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியமின்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், கனமழை முன்னறிவிப்பை கருதி மக்கள் விழிப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.