வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (11:30 IST)

அதிமுக கூட்டணியை விட்டுட கூடாது.. அதுக்குதான் பாஜக ஆலோசனை! – வி.பி.துரைசாமி!

ADMK vs BJP
அதிமுகவுடனான கூட்டணி முறிவிற்கு பின்னர் இன்று தமிழக பாஜக கூட்டம் நடைபெற்று வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



சமீபத்தில் அதிமுகவிற்கும், பாஜக மாநில தலைமைக்கும் இடையே தொடர் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை தொடர்ந்து இந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எந்த கட்சியின் கீழ் கூட்டணி அமைக்க போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் பாஜக டெல்லி தலைமையை சந்திக்க பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள நிலையில் இங்கு தமிழக பாஜக ஆலோசனை கூட்டம் நடந்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி “அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்கும். அதிமுக கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகதான் இந்த ஆலோசனை கூட்டம்” என்று கூறியுள்ளார்.

எனினும் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலே ஆலோசனை கூட்டம் நடைபெறுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Edit by Prasanth.K