வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (14:26 IST)

இணையவழிக் கல்விக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது - தனியார் பள்ளி இயக்குநர்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா பல்வேறு நாடுகள்இல் பாதிப்பை ஏற்படுடுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குத் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்துமாறு கூறுவதாக பலரும் புகார் தெரிவித்து வந்த நிலையில், தனியார் பள்ளி இயக்குநர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்குத் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்திக்கக் கூடாத். அரசாணை விதிகளை மீறி மாணவர்களை கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.