1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. akilesh yadav says about ayothi lights theft

அயோத்தியில் திருடர்கள்.. எங்கும் இருள்.. ராமர் கோவில் விளக்குகள் திருட்டு குறித்து அகிலேஷ் யாதவ்

akilesh
அயோத்தியில் திருடர்கள் அதிகமாகி விட்டார்கள் என்றும் அயோத்தி ராமர் கோவில் செல்லும் பாதையில் விளக்குகள் திருடப்பட்டதால் இருள் சூழ்ந்துள்ளது என்றும் முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராமர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த விளக்குகள் திருடப்பட்டதாகவும் இதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 3,800 விளக்குகள் திருடப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறிய போது ’அயோத்தியில் திருடர்கள் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து விட்டதாகவும், அங்கு மின் கம்பங்கள் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்படுவதாகவும் பாஜக ஆட்சி என்றால் எங்கும் இருள் தான் என்றும் இன்றைய அயோத்தியை பாஜக வேண்டாம் என்கிறது என்றும் அவர் பதிவு செய்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் குஷ்பு.. என்ன காரணம்?