மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்: புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்வர் பேச்சு
சென்னையில் இன்று புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று தெரிவித்துள்ளார்
புற்றுநோயை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கும் காவலர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்
மேலும் அமைச்சர் காமராஜ் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன் என்றும் அதற்கு முழு காரணம் மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சை தான் என்றும் அவர் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மருத்துவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்று கூறிய தமிழக முதல்வருக்கு மருத்துவர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது