திங்கள், 9 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 நவம்பர் 2024 (14:43 IST)

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து தமிழக பாஜக பிரபலம் தமிழிசை சௌந்தரராஜன் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் டாக்டர் பாலாஜி அவர்கள் தாக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது வேதனை அளிக்கக் கூடியது.
 
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது... மருத்துவர்கள் அனைத்து நோயாளிகளையும் பாகுபாடற்ற மனநிலையிலேயே சிகிச்சை அளிக்கிறார்கள். நோயாளியின் உறவினர்கள் தங்கள் உறவினர்கள் நோயோடு போராடுகிறார்கள் என்ற வேதனை அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அது மருத்துவர்களை தாக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கக் கூடாது.. 
 
மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கும் நோயாளிகளின் உறவினருக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்.. ஆனால் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை  நிலவுகிறது என்பது வேதனை...
 
 மருத்துவர்  இதய நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இருக்கிறார்.. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்... மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்....
 
இவ்வாறு டாக்டர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran