1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (14:31 IST)

திமுகவில் இணைவேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சரவணன் பேட்டி!

doctor saravanan
திமுகவில் இணைவேன்: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சரவணன் பேட்டி!
முதலமைச்சர் வாய்ப்பு கொடுத்தால் திமுகவில் இணைந்து திமுகவின் வெற்றிக்காக பாடுபடுவேன் என பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை சரவணன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மதுரை பாஜக மாவட்ட செயலாளராக இருந்த சரவணன் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரவணனை கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தார்
 
 இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரவணன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாய்ப்பளித்தால் திமுகவில் இணைந்து பயணிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் திமுகவில் பயணிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வாய்ப்பளித்தால் திமுகவில் இணைந்து பயணிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன் முதலில் வைகோவில் மறுமலர்ச்சி திமுக வில் இருந்தவர் என்பதும் அதன் பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இருந்தவர் என்பதும் அதனை அடுத்து பாஜகவில் இணைந்த டாக்டர் சரவணன் தற்போது மீண்டும் திமுகவில் இணைய இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது