வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 மே 2024 (11:24 IST)

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு.. கைதான அரசு மருத்துவருக்கு சில நிமிடங்களில் நெஞ்சுவலி..!

திண்டுக்கல் மாவட்டத்தில் செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் கைதான நிலையில் கைதான சில நிமிடங்களில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி என்ற பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் சீனிவாசன் என்பவர்  சுகன்யா என்பவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது 
 
மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறு சுகன்யாவை அவர் வலியுறுத்திய நிலையில் ஒருசில மாத்திரைகளை உட்கொண்டு மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுகன்யாவின் புகாரை பெற்று சீனிவாசனை காவல்துறையினர் கைது செய்தனர் 
 
அப்போது மருத்துவர் சீனிவாசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran