1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2023 (12:26 IST)

சினிமாவை சினிமாவா பாக்குறாங்களா? லியோவுக்கு ஏன் அனுமதி தரல? – தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி!

தமிழகத்தில் லியோ படத்திற்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி அளிக்காதது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள படம் லியோ. இந்த படத்திற்கு மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளே அனுமதிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் காலை 9 மணி காட்சிக்குதான் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் “இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்ற மகிழ்ச்சியில் எல்லாரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என அதற்கு பலர் பேசி வந்தார்கள். ஆனால் இவர்கள் சினிமாவை சினிமா போல பார்க்கிறார்களா?

எதிர்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலினுக்கு இருந்த துணிச்சல் தற்போது முதல்வரான பிறகு காணாமல் போய்விட்டது. புதுச்சேரியில் லியோ படத்திற்கு காலை 7மணி காட்சிக்கே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படம் 7 மணிக்கு வெளியாகவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K