ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (17:14 IST)

காதலனுக்காக பெண் என்ன செய்தார் தெரியுமா...?

காதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போரடிய பெண் எலி மருந்தை குடித்து  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள பாகனேரியில் வசித்து வந்தவர் பிருந்தா ஆவார்.  இவர் அசோக் என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில் அசோக்கின் வீட்டில் எதிர்ப்பு வரவே அவரது பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அசோக்கிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் மும்மரமாக இருந்தனர்.இது தெரிந்த பிருந்தா தன் அசோக்கின் கலியாணத்திற் எதிர்ப்பு தெரிவித்து எலி மருந்தை குடித்ததாக தெரிகிறது.
 
அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.