திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : சனி, 23 மார்ச் 2019 (12:34 IST)

நாட்டிலேயே சிறந்த முதல்வர் யார் தெரியுமா? எடப்பாடிக்கு என்ன இடம் தெரியுமா.. கருத்துகணிப்பு முடிவு!

மக்களவைத் தேர்தல் விரைவில் நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில் எந்த மாநில முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன் வைத்து சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி இருந்தது. அந்த முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
 

 
இதன்படி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சிறப்பாக செயல்படுவதாக 79.2 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக வாக்காளர்கள் மத்தியில் சந்திரசேகர் ராவ் முதலிடத்தை பெற்றுள்ளார். 
 
இதைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 2வது இடத்திலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4வது இடத்தை பிடித்துள்ளார்.  11 வது இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிடித்துள்ளார்.
 
இந்த பட்டியலில்  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தை பிடித்துள்ளார். நாட்டிலேயே மிக மோசமான செயல்பாடு கொண்ட முதல்வராக இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 42 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.