1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 ஏப்ரல் 2021 (13:02 IST)

ஏப்ரல் 9 முதல் ஊரடங்கு... சென்னை கார்ப்பரேஷன் பதிவு பின்னணி என்ன?

தனது அதிகாரப்பூரவ வலைத்தளப் பக்கத்தில் சென்னை கார்ப்பரேஷன் ஊரடங்கு குறித்த தகவலை பதிவிட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் கடந்த சில வாரமாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்ததும் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வரும் என்று பேசிக் கொள்ளப்பட்டது.
 
 இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஊரடங்கு போலி செய்தி ஒன்று வலம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 தொடங்கி 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்போவதாகவும், அப்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்றும் ஒரு பட்டியலை சென்னை கார்ப்பரேஷன் தயாரித்தது வெளியிட்டது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை தனது அதிகாரப்பூரவ வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு சென்னை கார்ப்பரேஷன், வெறும் வதந்தி என்றும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின் தொடருங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.