1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 22 ஜனவரி 2024 (07:22 IST)

பிரமாண்டமான அரங்கம்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திமுக இளைஞரணி மாநாடு..!

திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழனாகப் பெருமை கொள்வதாக நெகிழ்ந்த ‘பந்தல்’ சிவா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம் 9.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், 45 நாட்களில் அமைக்கப்பட்டதாகவும்,  இந்த அரங்கத்தில் 1.5 லட்சம் பேர் அமர்ந்து மாநாட்டை பார்த்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
 
இந்த சாதனை குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றதாகவும், இந்த சாதனையை சாத்தியமாக்கிய அனைத்து இளைஞர்களுக்கும் நன்றி எனவும், தமிழனாகப் பெருமை கொள்வதாகவும் கூறினார்.
 
இந்த சாதனை தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு காட்டியுள்ளது. தமிழக இளைஞர்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கையை இந்த சாதனை வெளிப்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva