ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஜனவரி 2024 (11:17 IST)

திமுக இளைஞரணி மாநாட்டிற்கு மு கருணாநிதி வாழ்த்து : பிரமிக்க வைத்த AI தொழில்நுட்பம்

திமுக இளைஞரணி மாநாடு இன்று சேலத்தில் நடைபெற்று வரும் நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

திமுகவின் இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக இரண்டாவது இளைஞர் அணி மாநாடு சேலத்தில் நடந்து வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்

இந்த நிலையில் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான மு கருணாநிதி வாழ்த்து சொல்வது போல் AI வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தனது வாழ்த்துக்கள் என்றும்  பறிபோன மாநிலங்களின் உரிமையை மீட்க இந்த மாநாடு உதவும் என்றும் பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் மாநிலங்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் கருணாநிதி அவர்கள் பேசுவது போலவே உள்ளது. இந்த வீடியோவை திமுகவினர் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்

Edited by Siva