வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (12:50 IST)

அடிப்படை உறுப்பினர் பதவியை கூட விடல! – அனைத்திலிருந்தும் விலக்கிய திமுக!

சமீபத்தில் கட்சியின் முடிவுகளுக்கு எதிராக பேசியதாக பதவி நீக்கம் செய்யப்பட்ட திமுக பிரமுகர் கே.பி.ராமலிங்கம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக திமுக அறிவித்துள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில் கே.பி.ராமலிங்கம் அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என அறிக்கை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சியின் முடிவுகளுக்கு எதிராக அறிக்கை விடுத்ததாக கே.பி.ராமலிங்கம் திமுக மாநில விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் நீடித்து வந்தார். இந்நிலையில் கே.பி.ராமலிங்கத்தை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிகமாக விலக்குவதாக திமுக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக வெளியேறி வேறு கட்சிகளில் இணைவாரா என்பது குறித்த பேச்சு எழுந்துள்ளது.