பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் – ஸ்டாலின் வாழ்த்து
திமுக வின் முன்னாள் பொதுச் செயலாளருமான பேராசியர் க அன்பழகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
திமுக வின் முன்னாள் பொதுச்செயளாரும் கலைஞரி 50 ஆண்டு கால நண்பருமான பேராசிரியர் க அன்பழகன் இன்று தனது 97 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அறிஞர் அண்ணா பெரியாரை விட்டு பிரிந்து வந்து திமுக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தபோது அண்ணாவுக்குத் துணையாக நின்றவர்கள் கருணாநிதி, நெடுஞ்செழியன் போன்றவர்கள்.
அண்ணாவின் இறப்பின் போது எழுந்த சலசலப்பில் கலைஞரை முதலில் ஆதரிக்காமல் இருந்தாலும் கட்சிக்காக கலைஞரின் பக்கம் நின்றார். அதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கட்சியை சிறப்பாக வழிநடத்தினர். 50 ஆண்டு காலம் இருவரும் சிறந்த நண்பராக செயல்பட்டனர். கலைஞரை விட 2 வயது மூத்தவரான அன்பழகன் கட்சியில் பொருளாளர், பொதுச் செயலாளர் எனப் பலப் பதவிகளை வகித்துள்ளார்.
வயது முதிர்வுக் காரணமாக சமீப காலமாக அர்சியல் நிகழ்வுகளில் அதிகமாகக் கலந்துகொள்ளாத அன்பழகன், கடந்த வாரம் நடைபெற்ற கலைஞரின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற்று, தனது நண்பருக்கு தனது மரியாதையை செலுத்தினார். 97 ஆவது அகவையில் நுழையும் அவருக்கு திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் ’பொதுவுடைமைக் கொள்கைகளை நிலைநாட்டிய மாமேதை கர்ல் மார்க்ஸூக்கு துணைநின்ற ஏங்கெல்ஸ் போல, சமூக நீதிக் கொள்கையை நிலைநாட்டிய கலைஞருக்கு உற்ற துணையாக எப்போதும் இருந்தவர் பேராசிரியர் அவர்கள். இப்போதும் அந்தக் கொள்கையை உறுதிபடக் காத்திடவும், கழகத்தின் வளர்ச்சியை மென்மேலும் மேம்படுத்தவௌம், உங்களில் ஒருவனான எனக்கு எப்போதும் தந்தையைப் போல துணை நிற்கிறார். அவருக்கு இனியப் பிறந்த நாள் வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.