திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 18 டிசம்பர் 2018 (13:58 IST)

திமுகவில் சேரமாட்டேன்..ஆனால்? தங்க தமிழ்செல்வனின் டிவீட்டால் ஆடிப்போன தினகரன்

அமமுகவில் தினகரனின் நம்பிக்கைகுரிய நபராக இருந்த செந்தில் பாலாஜி சில அதிருப்திகள் காரணமாக திமுகவில் இணைந்தார். இதனால், அமமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. 
 
தங்கதமிழ்செல்வனும் தினகரன் மீது கோபமாக இருப்பதாகவும், அவர் திமுக அல்லது அதிமுகவில் இணைய இருக்கிறார் என்று செய்தி வெளியானது. செய்தியாளர்களை சந்தித்த அவர் அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மேலும் எடப்பாடி பழனிச்சாமி திருந்தி எங்களுடன் வந்து சேரவேண்டும். 
 
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், நாங்கள் அதிமுகவிற்கு வருகிறோம், நாங்கள் வெற்றி பெற்றால் அதிமுகவினர், அமமுகவிற்கு வரட்டும் என்றும் கூறினார். 
 
அதற்கேற்றவாறு முதலமைச்சரும் தினகரன், சசிகலாவை தவிர பிரிந்து போன எம்.எல்.ஏக்கள் கட்சியில் இணையலாம் என கூறினார். இதனால் தங்கள் பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஒருவேளை அதிமுக பக்கம் போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார் தினகரன்.
 
 
இந்நிலையில் தங்க தமிழ்செல்வன், தனது டிவீட்டில் நான் திமுகவில் சேர விருப்பமாக திமுக ஐடி விங் வதந்தியை பரப்பி வருகிறது இதை யாரும் நம்ப வேண்டாம் நான் என்றும் தியாக தலைவி சின்னம்மா ஆணைக்கிணங்க மக்கள் செல்வர் டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும் துரோகத்தை  வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
 
நீண்ட குழப்பத்தில் இருந்த டிடிவி, தங்க தமிழ்செல்வனின் இந்த டிவீட்டால் நிம்மதி அடைந்துள்ளார் என கூறப்படுகிறது.