திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்.. இந்தி திணிப்புக்கு கண்டன தீர்மானம்
திமுகவின் உயர்நிலை கூட்டம் இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தி திணிப்பு உள்பட இந்த கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்
இந்தி திணிப்புக்கு எதிராக திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை புறந்தள்ளும் மத்திய அரசுக்கு கண்டனம் - திமுக
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - திமுக
மணிப்பூர் விவகாரத்தில் இனியும் வேடிக்கை பார்க்காமல், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - திமுக
"சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவோம், திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் 2026ல் திமுக ஆட்சியை மீண்டும் மலர செய்வார்கள்"
ஒன்றிய வருவாயில் மாநில அரசுக்கு 50 சதவீத நிதி பகிர்வை அளிக்க வேண்டும் - திமுக தீர்மானம்
ஒன்றிய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கு 50% நிதியை ஒதுக்க வேண்டும் - திமுக தீர்மானம்
Edited by Mahendran