1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (13:20 IST)

‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவருக்கு அடி, உதை: ஆசிரியர் கைது, பள்ளி முதல்வர் தலைமறைவு..!

ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி வகுப்பறை ஒன்றில் மாணவர் ஒருவர் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதியதை அடுத்து அந்த வகுப்பின் ஆசிரியர் அந்த மாணவனை அடித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த புகார் எழுந்து உள்ள நிலையில்  சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பள்ளியின் முதல்வர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
ஜம்மு காஷ்மீரில் உள்ள கத்துவா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மாணவர் ஒருவர் கரும்பலகையில் எழுதியிருந்தார். அதை உருது ஆசிரியர் ஃபரூக் அகமது என்பவர் கண்டு கடும் கோபமடைந்த அந்த மாணவரை கண்டித்து அடித்துள்ளார். 
 
இது குறித்து மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மேலும் பள்ளியின் முதல்வர் தலைவர் ஆகிவிட்டதாகவும் அவரை பிடிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
Edited by Mahendran