புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2019 (14:48 IST)

ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை.. உயர்நீதிமன்றம் உத்தரவு

ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, ராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில், அதிமுக சார்பாக போட்டியிட்டார் இன்பதுரை. அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த அப்பாவு 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.  இதனை தொடர்ந்து 203 தபால் வாக்குகளை எண்ணாமல் தேர்தல் அதிகரிகள் நிராகரித்ததாக  அப்பாவு வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராதாபுரம் தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு தேர்தல் அணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், 19,20,21 ஆகிய சுற்றுகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பராஜ் 69,590 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.