திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2019 (16:14 IST)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவிற்கு தொடர்பா? சிபிசிஐடி சம்மன்

சில நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், முருகன், சபரிராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 
 
கைதான 4 பேரும் பல தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 
 
சிபிசிஐடி இந்த வழக்கை கையில் எடுத்ததும் முதறகட்டமாக அந்த பண்ணை வீட்டை முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீட்டில் ஆணுறைகள் பல இருந்ததாக கூறப்பட்டது. மேலும், அந்த பண்னை வீட்டில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தனர். 
இப்போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையதாக பார் நாகராஜன் மற்றும் தென்றல் மணிமாறன் இருவரும் வரும் 28 ஆம் தேதி கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசிடம் மேற்கொண்ட விசாரணையின் பெயரில் இவர்கள் இருவருக்கும் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. பார் நாகராஜன் தெரிந்த ஒருவந்தான் ஆனால், இந்த தென்றல் மணிமாறன், கோவை மாவட்ட திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜின் மகன் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.