செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 11 ஆகஸ்ட் 2018 (15:38 IST)

திட்டம் போட்டு காய் நகர்த்தும் திமுக: திருவாரூரில் உதயநிதி? திருப்பரங்குன்றத்தில் அழகிரி?

அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி ஏற்கனவே காலியாக இருக்கும் நிலையில் தற்போது கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதியும் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், தாத்தா கருணாநிதியின் திருவாரூர் தொகுதி பேரன் உதயநிதிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் கசிகின்றன. மேலும், திருவாரூர் தொகுதியில் உங்களுக்கு போட்டியிட விருப்பமுள்ளதா என அழகிரியிடம் கேட்ட போது, இப்போது தேர்தல் குறித்து எந்த யோசனையும் இல்லை.  
 
அதேசமயம் திருவாரூர் தொகுதி மீது அதிக ஈடுபாடும் இல்லை. நமக்குதான் இருக்கே திருப்பரங்குன்றம் என ஆழகிரி தனது விருப்பத்தை சூககமாக தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
என்னத்தான் இது போன்ற அரசியல் பேச்சுக்கள் அடிப்பட்டாலும் கருணாநிதி இல்லாத திமுகவை வெற்றி பாதையில் அழைத்து செல்ல கட்சியில் உள்ள அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.