வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 11 ஆகஸ்ட் 2018 (11:33 IST)

தாத்தாவின் திருவாரூர் தொகுதி பேரனுக்கு? அரசியல் ஆழம் பார்க்கும் உதயநிதி!

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கருணாநிதி எம்எல்ஏ-வாக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பாணையை வெளியிட்டார். 
இந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், திருவாரூர் தொகுதி காலியான தொகுதி என்று தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் காலமானதால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. 
 
இதனால் தமிழகத்தில் விரைவில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் இடைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், தாத்தா கருணாநிதியின் திருவாரூர் தொகுதி பேரன் உதயநிதிக்கு ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் காற்றில் கசிகின்றன. ஏற்கனவே உதயநிதி கட்சி பணிகளில் ஈடுப்பட துவங்கிவிட்டார். இந்த இடைத்தேர்தல் மூலம் அவர் முழு அரசியலில் ஈடுபடுவார் என தெரிகிறது. 
 
மேலும், திமுகவில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் உதயநிதிக்கு முன்வரிசை ஒதுக்கப்படுவது இதனை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இதற்கான மறைமுக களவேலையில் இறங்கிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.