வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (19:10 IST)

வாக்காளர்களுக்கு பாதபூஜை செய்த தோல்வி அடைந்த திமுக வேட்பாளர்

வாக்காளர்களுக்கு பாதபூஜை செய்த தோல்வி அடைந்த திமுக வேட்பாளர்
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்ற திமுக வேட்பாளர் வாக்காளர்களை நேரில் சந்தித்து பாதபூஜை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ராமேஸ்வரம் நகராட்சியில் 10வது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் நம்புராஜன். இவர் அந்த தொகுதியில் தோல்வி அடைந்த போதிலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன் என்று கூறி அனைவரின் பாதங்களையும் கழுவி பாத பூஜை நடத்தினார்
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நன்றி தெரிவிக்கக் கூட வராத நிலையில் தோல்வியுற்றவர் பாதபூஜை நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது