திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (15:57 IST)

அண்ணா அறிவாலயம் திறப்பு விழா: சோனியா, ராகுலுக்கு அழைப்பு!

அண்ணா அறிவாலயம் திறப்பு விழா: சோனியா, ராகுலுக்கு அழைப்பு!
டெல்லியில் அண்ணா அறிவாலயம் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பதும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் டெல்லியில் திறக்கப்பட உள்ள இந்த விழாவில் கலந்துகொள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது 
 
திமுக எம்பி டிஆர் பாலு இந்த அழைப்பிதழை நேரில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லி தீனதயாள் உபாத்தியாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது