வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (11:49 IST)

எதிர்ப்பார்த்தது ஒரு கோடி, கிடைச்சது ரெண்டு கோடி: ஸ்டாலின் ஹேப்பி!!

சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. பல அரசியல் கட்சிகளும், மாணவ அமைப்புகளும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தின. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தன.
 
இந்நிலையில் தமிழகத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.
 
கையெழுத்து இயக்கம் மூலம் மக்களிடம் கையெழுத்து பெற்று அதை ஆதாரமாக கொண்டு மேற்கொண்ட போராட்டத்தை எதிர்கட்சிகள் தொடர இருப்பதாக கூறபட்டது. இந்நிலையில், சிஏஏவுக்கு எதிராக ஒரு கோடி பேரின் கையெழுத்தை எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டுள்ளனர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
மேலும், கையெழுத்து இயக்கத்தில் பெறப்பட கையெழுத்தின் நகல் குடியரசுத் தலைவரிடம் 5 நாட்களில் ஒப்படைக்கபடும் என்றும் கூறியுள்ளார்.