1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

3 மாநிலங்களவை உறுப்பினரகள் பதவிகளையும் கைப்பற்றும் திமுக: எப்படி தெரியுமா?

தமிழகத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருக்கும் நிலையில் இந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நிரப்பும் தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாக இருந்தாலும் ஒரு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திமுக விடுத்த கோரிக்கையின் காரணமாக ஒவ்வொரு உறுப்பினர்களாக தனித்தனியாக தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறு தேர்தல் நடைபெற்றால் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களையும் திமுகவே பெற்றுக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் மறைவு மற்றும் வைத்திலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் ராஜினாமா செய்ததை அடுத்து மூன்று உறுப்பினர் பதவி காலியானது. இதில் முகமது ஜான் மறைவு காரணமாக ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த தேர்தலில் 118 எம்எல்ஏக்கள் வாக்களித்தால் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார். திமுக வசம் 133 எம்எல்ஏக்கள் இருப்பதால் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி அதேபோல் தனித்தனியாக தேர்தல் வைத்தால் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் திமுக பெற்று விடும் என்றும் அதிமுகவுக்கு ஒரு பதவி கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது